• Home |
  • வெர்மிகுலைட்

வெர்மிகுலைட்

வெர்மிகுலைட்

வெர்மிகுலைட் என்பது நீரேற்றப்பட்ட அடுக்கடுக்கான செதில் போன்ற அமைப்புடைய மைக்கா வகையை சார்ந்த கனிமமாகும். இதை அதிக வெப்பநிலைக்கு சூடாக்கும்போது நீர் மூலக்கூறுகள் இழப்பதன் மூலம் 8 முதல் 14 மடங்கு வரை விரிவடையும் தன்மை கொண்டது.

 

விரிவாக்கப்பட்ட வெர்மிகுலைட்டின் மொத்த அடர்த்தி (Bulk Density) 6 மி மீ முதல் 12 மிமீ வரையிலான அளவுக்கு 172 கன மீட்டர் மற்றும் 1 மி மீ-க்கும் கீழ் உள்ள அளவுள்ள வெர்மிகுலைட்டின் மொத்த அடர்த்தி 225 கன மீட்டர் ஆகும். கச்சா வெர்மிகுலைட்டின் நிறம் வெளிர் அல்லது அடர் பழுப்பு மஞ்சள் / பச்சை அல்லது கிட்டத்தட்ட கருப்பு நிறத்தில் இருக்கும். மேலும் சூடாக்கி விரிவாக்கம் செய்யப்பட்ட வெர்மிகுலைட்டின் நிறம் பளபளப்பான மஞ்சள் அல்லது வெள்ளி கலந்த பொன்னிறத்தில் இருக்கும்.

 

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா, செவத்தூர் கிராமத்தில், கட்டிடம், தோட்டம்-விவசாயம் மற்றும் உயிரி-தொழில்நுட்ப நடவடிக்கைகளில் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப, உலோகம் அல்லாத பல்துறை கனிமமான வெர்மிகுலைட்டை டாமின் நிறுவனமானது சுரங்கத்திலிருந்து வெட்டியெடுத்து விரிவாக்கப்பட்ட வெர்மிகுலைட்-ஆக உற்பத்தி செய்கிறது. விரிவாக்கப்பட்ட வெர்மிகுலைட் கீழ்கண்ட தரங்களில் விற்பனை செய்யப்படுகின்றது.

 

தரம்-I – 12 மிமீக்கு மேல்
தரம்-II – 6 மிமீ முதல் 12 மிமீ வரை
தரம்-III – 3 மிமீ முதல் 6 மிமீ வரை
தரம்-IV – 1 மிமீ முதல் 3 மிமீ வரை
கிரேடு-V – 1 மிமீக்குக் கீழே

வெர்மிகுலைட்
விரிவாக்கப்பட்ட வெர்மிகுலைட்
வெர்மிகுலைட் சுரங்கம்
வெர்மிகுலைட் தொழிற்கூடம்
A-AA+
Skip to content