குவார்ட்ஸ்
குவார்ட்ஸ் ஒரு கனிமம் ஆகும். இது சிலிக்கா குழுமத்தில் உள்ள கனிமம் ஆகும். அதிக அளவில் சிலிக்கா எரிமலை பாறைகளிலும்,உருமாறிய பாறைகளுடன் மெல்லிய உடையும் பாறை (சிஸ்ட்), பொட்டாஷ் மற்றும் சிலிக்கா இணைந்த பாறை (நெய்ஸ்), உயர்நிலை வெப்பநிலையில் பெல்ஸ்பார்,மைக்கா மற்றும் சிலிக்கா பாறை (சார்னகைட்) களுடன் காணப்படுகிறது. இதன் அடிப்படையில் மணற்கற்களை கொண்டதாகும். தமிழ் நாடு கனிம நிறுவனம் தரம் வாய்ந்த குவார்ட்ஸை உற்பத்தி செய்கிறது. இதன் பயன்பாடுகள் கொதிகலன் உள் பூச்சு, பீங்கான் தயாரிப்பு, கண்ணாடி தொழிற்சாலை,மின்னணு தொழிற்சாலை, இரும்பு சிலிக்கா தயாரிப்பு,மின் கடத்தா சாதனமாக,அரைக்கும் கல் தயாரிப்பில்,உப்புக்காகிதம் தயாரிப்பில்,அலங்கார கற்கள் தயாரிப்பில் இந்த குவார்ட்ஸ் பெரும் பங்கு வகிக்கிறது.