சுண்ணாம்புக் கற்கள்
சுண்ணாம்புக் கற்கள் என்பது கால்சியம் மற்றும் கார்பனேட்டின் வெவ்வேறு படிவங்களான கால்சைட் மற்றும் அரகோனைட் போன்ற தாதுக்களால் ஆன படிவப்பாறை வகையைச் சேர்ந்தவையாகும்.
பெரும்பாலான சுண்ணாம்புக்கற்கள் படிவப்பாறை மற்றும் போராமெனிபெரா வகையைச் சேர்ந்த கடல் உயிரினங்களின் எலும்பு, அதன் மேலோடுகளின் படிவுகளால் அமையப் பெற்றது ஆகும். இந்த சுண்ணாம்புக்கற்கள் பெரும்பாலும் *சிமெண்ட்* தயாரிப்பில் முக்கிய மூலப்பொருள் ஆகும். தமிழ் நாடு கனிம நிறுவனத்திற்கு அரியலூர் மாவட்டம் பெரிய நாகலூரில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் உள்ளது.அதன் பரப்பளவு 12.74.5 ஹெக்டேர் ஆகும். இதில் நாளொன்றுக்கு சுமார் 1500 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது ஆகும்.