• Home |
  • கிராபைட்

கிராபைட்

கிராபைட்

  • தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டம் சிவகங்கை தாலுக்காவின் சேந்தி உடையநாதபுரம், குமரப்பட்டி மற்றும் புதுப்பட்டி கிராமங்களில் 600 ஏக்கர் (243 ஹெக்டர்கள்) நிலபரப்பில் உள்ள கிராபைட் தாதுவை டாமின் கொண்டுள்ளது. குத்தகைப் பகுதியில் கிராபைட் தாதுவின் தோராய இருப்பு மூன்று மில்லியன் டன்கள் ஆகும். சிவகங்கை பகுதியில் கிடைக்கும் கிராபைட் தாதுவின் நிலையான கார்பன் (fixed carbon) அளவு தோராயமாக 14 விழுக்காடு ஆகும்.
  • கிராபைட் சுத்திகரிப்பு தொழிற்சாலை கிராபைட் சுத்திகரிப்பு தொழிற்சாலையானது  1994ம் ஆண்டு நாளொன்றுக்கு 200டன் கிராபைட்தாதுவை அரைத்து 18 முதல் 22டன் வரை கிராபைட் துகள்களாக தயாரிக்கும் வகையில் தொடங்கப்பட்டது. இத்தொழிற்சாலையானது கிராபைட் சுரங்கத்தின் அருகில் ரூ. 28 கோடி செலவில் உயர் தொழில்நுட்பத்தின் மூலம்  14% நிலையான கார்பன் உள்ள கிராபைட் தாதுவினை சுத்திகரித்து 84%  முதல் 96% வரை செறிவூட்டப்பட்ட கார்பன் கொண்டதாக உற்பத்தி செய்ய தொடங்கப்பட்டது. இதற்காக கிராபைட் சுரங்கத்திலிருந்து ஆண்டொன்றுக்கு 1,05,000டன் கிராபைட் தாதுவினை உற்பத்தி செய்து கிராபைட் சுத்திகரிப்பு ஆலைக்கு அனுப்பப்படுகின்றது.
கிராபைட் தாது
கிராபைட் செதில்கள்
கிராபைட் சுரங்கம், சிவகங்கை
கிராபைட் ஆலை, சிவகங்கை
A-AA+
Skip to content