• Home |
  • வடிவமைக்கப்பட்ட கிரானைட்கற்த் துண்டங்கள்

வடிவமைக்கப்பட்ட கிரானைட்கற்த் துண்டங்கள்

வடிவமைக்கப்பட்ட கிரானைட்கற்த் துண்டங்கள்

  • மதுரை  மாவட்டம், மேலுாரில் டாமின் நிறுவனம் 100% ஏற்றுமதி சார்ந்த கிரானைட் பலகைகள் (Granite Slabs) உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நிறுவியுள்ளது. இத்தொழிற்சாலையில் ஆண்டுக்கு இரண்டு மற்றும் மூன்று செ.மீ. தடிமன் கொண்ட 1,80,000 சதுரமீட்டர் கிரானைட் பலகைகளை உற்பத்தி செய்ய முடியும். இந்ததொழிற்சாலையில் மிகவும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தரமுள்ள இயந்திங்கைளால் உற்பத்திப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் உற்பத்தி செலவு மிகவும் குறைகிறது மேலும் இத்தொழிற்சாலையில் பெருநிறுவனங்களின் கொள்முதல் ஆணைக்கு ஏற்ப அறுக்கப்பட்ட கிரானைட் பலகைகள் (sawn  slab) மெருகூட்டப்பட்ட கிரானைட் பலகைகள் (polished slab), லெதர் போன்ற வடிவமைக்கப்பட்ட (leather  finished)
  • கிரானைட் பலகைகள் மற்றும்  தேவைக்கேற்ப அளவுள்ள கிரானைட் பலகைகள் ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்ததொழிற்சாலையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிகப்பெரிய 3 அறுவை (Gang saw) இயந்திரங்கள், 2 கம்பி அறுவை இயந்திரங்கள் (wire  saw), 1 மெருகூட்டும் இயந்திரம் (Line  polishing machine), பிசின் மெருகூட்டும் கூடம் (Resin plant) மற்றும் மூலைவெட்டும் இயந்திரங்கள் (edge cutting machine) ஆகிய இயந்திரங்கள் மூலம் உற்ப்பத்தி பணி மேற்கொள்ளப்படுகிறது.
  • மேலும் மூலகற்த்துண்டங்ளை பெறுவது முதல் அவற்றை வடிவமைத்து வெளியில் அனுப்பும் வரையிலான செயல்முறைகளில் பகுத்து அறியும் செயல்முறை ஓட்டம் மூலமாக (Rational process flow) மிகவும் நவீன செயல்முறை வசதிகளுடன் கூடிய உற்பத்திப்பணி இந்த கிரானைட் பலகை உற்பத்தி செய்யும் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ளன. டாமின் நிறுவனம், தற்பொழுது, கட்டிடங்களுக்குத் தேவையான 2 மற்றும் 3 செ.மீ.  தடிமன் அளவுள்ள கொழும் புஜுப்ரானா, ரெட்வேவ்,  பேரடைசோ, பாக்ஸ்பிரவுன், ஹாவ்க்ஸ்ஐ போன்ற வண்ண கிரானைட் பலகைகளை உற்பத்தி செய்கின்றது. இவற்றில் முக்கியமாக 70% வண்ண கிரானைட் கற்களும்  30% கருப்பு கிரானைட் கற்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
A-AA+
Skip to content